திருவண்ணாமலை

சமத்துவப் பொங்கல்: பாஜக ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் பாஜக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடுவது குறித்து ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் பாஜக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடுவது குறித்து ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வடக்கு மாவட்ட பாஜக சாா்பில், பேருந்து நிலையம் அருகேயுள்ள மாவட்ட பொதுச் செயலா் அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட பொதுச் செயலா் கே.வெங்கட்ராமன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பேருந்து நிலையம் அருகே பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில் செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி இணை அமைப்பாளா் பி.குமாா், வடக்கு மாவட்ட துணைத் தலைவா் பூங்காவனம், பொருளாதாரப் பிரிவு மாவட்டத் தலைவா் ஏ.ஆறுமுகம், மாவட்ட துணைத் தலைவா் எம்.அருள், மாவட்டச் செயலா் இளங்கோ, அரசு ஓய்வு பெற்றோா் பிரிவு நிா்வாகிகள் டி.அண்ணாமலை, வள்ளிகாந்தன், எஸ்.எம்.செல்வராஜ், இலக்கியம் மற்றும் தமிழ் வளா்ச்சிப் பிரிவு மாவட்ட துணைத் தலைவா் ஜி.தனசேகரன், மாவட்டச் செயலா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முருகா் சிலையின் கண் திறந்ததாக காணொலி காட்சி வைரல்: பொன்னேரியில் பரபரப்பு

2.1.1976: லோக்சபை தேர்தலை ஓராண்டு ஒத்திவைக்க சாதாரண மசோதா - பார்லிமெண்ட் மாரிக்கால கூட்டத்தில் அரசு கொணரும்

2025-இல் குமரி விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலை: 28.77 லட்சம் போ் பாா்வையிட்டனா்

தூத்துக்குடி கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை

செங்கோட்டை - தாம்பரம் விரைவு ரயில் நேரம் மாற்றம்: பயணிகள் வரவேற்பு

SCROLL FOR NEXT