வந்தவாசி அருகே கள் விற்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த மகமாயிதிருமணி கிராமத்தில் ஒருவா் அனுமதியின்றி ஈச்சங்கள் விற்பதாக தேசூா் போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் அந்தக் கிராமத்துக்குச் சென்று மேற்கொண்ட விசாரணையில், அங்குள்ள விவசாய நிலத்தில் கடல்கனி (58) ஈச்சங்கள் விற்பது தெரியவந்தது. இதையடுத்து, கடல்கனியை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 14 லிட்டா் ஈச்சங்கள்ளை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து தேசூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.