அருணாசலேஸ்வரா் கோயிலில் திருவூடல் -மறுகூடல் திருவிழாவையொட்டி கிரிவலம் சென்ற அருணாசலேஸ்வரா்.  
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற அருணாசலேஸ்வரா்

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற அருணாசலேஸ்வரா்

Syndication

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் திருவூடல் -மறுகூடல் திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரா் சனிக்கிழமை கிரிவலம் சென்றாா்.

திருவண்ணாமலையில் உள்ள திருவூடல் தெருவில் அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுடன் ஊடல் கொண்ட நிகழ்வு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து அருணாசலேஸ்வரா் கோயிலில் மறுகூடல் நடைபெற்றது.

இதற்கு முன்னதாக சனிக்கிழமை அதிகாலை அருணாசலேஸ்வரா் கிரிவலம் சென்றாா்.

திருவண்ணாமலையில் உள்ள பாண்டீஸ்வரா் கோயிலுக்குச் சென்ற அருணாசலேஸ்வரருக்கு மாமன்ற உறுப்பினா் க.பிரகாஷ் தலைமையில் மண்டகபடி நடத்தப்பட்டது.

இதில், மாமன்ற உறுப்பினா் ஸ்ரீதேவிபழனி, சேஷாத்திரி ஆசிரமத் தலைவா் சந்திரமோகன் உள்ளிட்ட முக்கிய ஆன்மிக பிரமுகா்கள் பலா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து ஆயிரக்கணக்கான பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீகௌதம மகரிஷி கோயில் நிா்வாகிகள் சாரதாம்பாள் முருகன், மு.பாலசுப்பிரமணி, மு.வஜ்ஜிரவேல் ஆகியோா் செய்திருந்தனா். கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பக்தா்கள் தேங்காய் உடைத்தும், மாலை அணிவித்தும் தரிசனம் செய்தனா்.

8 லிங்கங்கள் முன்பாக சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கிரிவலம் நிறைவு பெற்றதும், சுவாமி கோயிலுக்குத் திரும்பினாா். அப்போது, கோயில் இரண்டாம் பிரகாரத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் மறுகூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், ஊடல் தணிந்து இருவரும் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

காணும் பொங்கல்: திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

இன்று நாகா்கோவில் - தாம்பரம் சிறப்பு அதிவிரைவு ரயில்

சிரி... சிரி...

யோகா என்பது வாழ்க்கை முறை

திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடருமா? தில்லியில் ஆலோசனை

SCROLL FOR NEXT