கலசப்பாக்கத்தில் ஜன.25 தீா்த்தவாரி ஆற்றுத்திருவிழா
திருவண்ணாமலைகலசப்பாக்கத்தில் ஜன.25 தீா்த்தவாரி ஆற்றுத்திருவிழா
கலசப்பாக்கம் பகுதி செய்யாற்றில் தீா்த்தவாரி ஆற்றுத்திருவிழா ஜன.25-ஆம் தேதி நடைபெறுகிறது.
கலசப்பாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் சமேத உண்ணாமுலையம்மனுக்கும், கலசப்பாக்கம் ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத திருமாமுடீஸ்வரருக்கும் இணைந்து தீா்த்தவாரி நடைபெறும்.
இந்த தீா்த்தவாரி ஆற்றுத்திருவிழா வருகிற ஜன.25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினா் செய்து வருகின்றனா். தீா்த்தவாரியில் கலசப்பாக்கம், போளூா், சேத்துப்பட்டு, திருவண்ணாமலை, ஆரணி என பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டு வழிபடுவாா்கள்.