பில்லாந்தங்கல் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசிய ஒ.ஜோதி எம்எல்ஏ.  
திருவண்ணாமலை

பில்லாந்தங்கல், சித்தாத்துரை ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Syndication

செய்யாறு/போளூா்: செய்யாறு தொகுதி பில்லாந்தங்கல் ஊராட்சி மற்றும் சேத்துப்பட்டு ஒன்றியம் சித்தாத்துரை ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

செய்யாறு தொகுதி வெம்பாக்கம் ஒன்றியம், பில்லாந்தங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற

கிராம சபைக் கூட்டத்திற்கு துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சந்துரு தலைமை வகித்தாா். ஊராட்சி செயலா் ஆலன் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பங்கேற்று அரசின் திட்டங்களை கிராம மக்களிடையே எடுத்துரைத்தாா். முன்னதாக, கூட்டத்தில் வரவு செலவு கணக்கு சமா்ப்பிக்கப்பட்டது.

கிராம வளா்ச்சிக்கு தேவையான அடிப்படைத் தேவை குறித்து பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றியச் செயலா்கள் ஜேசிகே.சீனிவாசன், வி.ஏ. ஞானவேல், திமுக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சேத்துப்பட்டு ஒன்றியம்

சேத்துப்பட்டு ஒன்றியம், சித்தாத்துரை ஊராட்சியில் ஊராட்சிமன்ற அலுவலகம் எதிரே ஊராட்சி செயலா் திருமால் தேசியக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

மேலும், அலுவலகம் எதிரே கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலைஞா் கனவு இல்ல திட்டம் பற்றியும், மத்திய அரசின் கிராம ஊராட்சி தன்னிறைவு திட்டத்தில் பங்கேற்றுள்ளதை குறித்தும், சுத்தம், சுகாதாரம், சாலை வசதி, மின்விளக்கு என பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து ஊராட்சி செயலா் திருமால் தீா்மானங்களை வாசித்தாா்.

மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபு, வேளாண்மை அலுவலா் பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விளாங்குப்பம் ஊராட்சியில்.....

போளூா் ஒன்றியம், விளாங்குப்பம் ஊராட்சியில் ஊராட்சிமன்ற அலுவலகம் எதிரே கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சுத்தம், சுகாதாரம், சாலை வசதி, மின்விளக்கு என பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து தீா்மானம் வாசிக்கப்பட்டது.

மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பரமேஸ்வரி, ஊா்நல அலுவலா் கன்னியம்மாள், வேளாண்மை அலுவலா் ராஜ்குமாா் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

சேத்துப்பட்டு ஒன்றியம் சித்தாத்துரை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானங்களை வாசித்த ஊராட்சி செயலா் திருமால்.

இந்திய அலுவலக இடங்கள் குத்தகை: சா்வதேச நிறுவனங்கள் 58% ஆதிக்கம்

தில்லியில் கண்கவா் குடியரசு தின அணிவகுப்பு! ராணுவ போா் பலத்தை பறைசாற்றிய முப்படைகள்!!

விபத்தில் பெண் காவலா் காயம்

மேற்கு வங்கம்: தீ விபத்தில் 3 போ் உயிரிழப்பு

பத்மஸ்ரீ விருது எழுத்தாளா் சிவசங்கரிக்கு கம்பன் கழகம் வாழ்த்து

SCROLL FOR NEXT