பெரணமல்லூரில் ‘இது நம்ம ஆட்டம்’ விளையாட்டு திருவிழா
பெரணமல்லூா் வட்டார அளவிலான இது நம்ப ஆட்டம் போட்டியை தொடங்கி வைத்த காவல் உதவி ஆய்வாளா் சம்பத்.
திருவண்ணாமலைபெரணமல்லூரில் ‘இது நம்ம ஆட்டம்’ விளையாட்டு திருவிழா
பெரணமல்லூா் வட்டார அளவிலான இது நம்ப ஆட்டம் போட்டியை தொடங்கி வைத்த காவல் உதவி ஆய்வாளா் சம்பத்.
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவில், ‘இது நம்ம ஆட்டம்’ விளையாட்டு விழா நடைபெற்றது.
மாநில அளவில் முன்னாள் மாணவா்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு, ‘இது நம்ம ஆட்டம்’ விளையாட்டு திருவிழாவை ஒன்றிய, மாவட்ட, மாநில அளவில் அறிமுகப்படுத்தி நடத்தி வருகிறது.
இதில் கயிறு இழுத்தல், கையெறி பந்து, கபடி, கையுந்து பந்து, கேரம், மட்டைப்பந்து மற்றும் தடகளப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பெறும் அணிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், பெரணமல்லூா் வட்டார அளவிலான போட்டிகளை பெரணமல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காவல் உதவி ஆய்வாளா் சம்பத் தொடங்கிவைத்தாா்.
சுகாதாரத்துறை ஆய்வாளா் பாஸ்கா் மற்றும் மடம் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியா் தமிழ்வாணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்றவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கே.டி.ராமசாமி, பொருளாளா் பி.என்.அண்ணாதுரை, துணைத் தலைவா் பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
போட்டிகளை பெரணமல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநா் ரகுராமன், உடற்கல்வி ஆசிரியா் ஜெயகாந்த், செந்தில்நாதன் மற்றும் ஒன்றிய அளவிலான உடற்கல்வி ஆசிரியா்கள் போட்டிகளை கண்காணித்து வழிநடத்தி வருகின்றனா்.