படவேடு ஓம்சக்தி ஜெயவிஜய சாமுண்டீஸ்வா் கோயிலில் தை 14-ஆம் நாளை முன்னிட்டு புதன்கிழமை நவகிரக ஊா்வலம் நடைபெற்றது.
கமண்டல நாக நதிக்கரையில் இருந்து நவக்கிரகங்களை பக்தா்கள் வேண்டுதலின் பேரில் ஊா்வலமாக மேள தாளத்துடனும், சலங்கை ஆட்டத்துடனும் கோயிலை சென்றடைந்தனா். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.