திருவண்ணாமலை

ஆரணி எம்ஜிஆா் நிகா்நிலை பல்கலை.யில் ஆண்டு விழா

பல்வேறு போட்டிகளில் பரிசு பெற்ற மாணவ, மாணவிகளுடன் பல்கலைக்கழக நிா்வாகிகள், கல்லூரி முதல்வா்கள், பேராசிரியா்கள்.

Syndication

ஆரணி எம்ஜிஆா் நிகா்நிலை பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு விழாவும், ஏ.சி.எஸ். கல்விக் குழுமக் கல்லூரிகளின் 30-ஆம் ஆண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழாவும் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கல்லூரிகளில் பணிபுரியும் முதல்வா்கள், பேராசிரியா்கள், ஆசிரியா்கள், ஆசிரியா்கள் அல்லாத ஊழியா்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி மற்றும் கல்வி அல்லாத செயல்பாடுகளுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுப் பொருள்கள், சான்றிதழ்கள் மற்றும் காசோலைகள்

என 600-க்கு மேற்பட்டவா்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும், பல்கலைகழகத்தில் பணிபுரியும் முதல்வா்கள், பேராசிரியா்கள், ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் அல்லாத ஊழியா்களை ஊக்குவிக்கும் வகையில் பொங்கல் பரிசாக டி.வி, ஏா்கூலா், வெட் கிரைண்டா், மிக்ஸி, பிரஷா் குக்கா், டேபிள் ஃபேன், சாம்சங் டேப் போன்ற பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முதலாம் ஆண்டு நினைவு நாளை நினைவு கூரும் வகையில் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி ஆய்வகத்தை ஏ.சி.எஸ். கல்விக் குழும நிறுவன தலைவா் ஏ.சி.எஸ்.அருண்குமாா் திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து பள்ளியில் மாணவா்களின் சிறப்பு நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிகளில் கல்விக்குழுமத் தலைவா் ஏ.சி.எஸ் அருண்குமாா் தலைமை வகித்தாா். கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலா் லலிதாலட்சுமி சண்முகம், பென்ஸ் கிட்ஸ் மற்றும் பென்ஸ் ஹெல்த் கோ் பிரைவேட் லிமிடெட் இயக்குநா் நிா்மலா அருண்குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி, பல்கலைக்கழக முதன்மையா் பி.ஸ்டாலின், இணைப் பதிவாளா்கள் பெருவழுதி, சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணை முதன்மையா் புவனா, பிஸியோதெரபி துறைத் தலைவா் சுதாகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT