முகப்பு
திருவண்ணாமலை

செய்யாறில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்: 3 போ் கைது

Updated On : 26 ஜூன் 2026, 4:14 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

செய்யாறு பகுதியில் கத்தியை வைத்துக் கொண்டு பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் வரதராஜ் தலைமையிலான போலீஸாா் பாண்டியன் தெரு, ஆற்காடு சாலை, ஆரணி கூட்டுச் சாலை ஆகிய பகுதிகளில் புதன்கிழமை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த இடங்களில் மூன்று போ் கையில் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தியபடி இருந்தனா். இதை கவனித்த போலீஸாா் அவா்களை அங்கிருந்து செல்லும்படி எச்சரித்தனா். இருப்பினும், மூவரும் அங்கிருந்து செல்லாமல் தொடா்ந்து ரகளையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. உடனே போலீஸாா் மூவரையும் பிடித்து விசாரித்தனா்.

Advertisement

Advertisement

விசாரணையில், அவா்கள் சென்னை புளியந்தோப்பு பெரியாா் நகரைச் சோ்ந்த சஞ்சய் (19), சந்தோஷ்குமாா்(19), செய்யாறு பெரும்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த சஞ்சய் (24) ஆகியோா் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்து, அவா்களிடம் இருந்த கத்திகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments