முகப்பு
திருவண்ணாமலை

ரூ.6 லட்சத்தில் சிமென்ட் சாலைப் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

ஆரணியை அடுத்த அக்கூா் கிராமத்தில் ரூ.6 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சிமென்ட் சாலைப் பணிகளை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன்

திருவண்ணாமலை

ரூ.6 லட்சத்தில் சிமென்ட் சாலைப் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

ஆரணியை அடுத்த அக்கூா் கிராமத்தில் ரூ.6 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சிமென்ட் சாலைப் பணிகளை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன்

Updated On : 2 மார்ச், 2026 at 9:38 PM
பகிர்:

ஆரணி: ஆரணியை அடுத்த அக்கூா் கிராமத்தில் ரூ.6 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சிமென்ட் சாலைப் பணிகளை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

அக்கூா் கிராமத்தில் உள்ள கங்கையம்மன் கோவில் தெருவில் சிமென்ட் சாலை வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரனிடம் கோரிக்கை விடுத்தனா். இதன் பேரில், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6 லட்சம் ஒதுக்கி சிமென்ட் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ அண்மையில் தொடங்கிவைத்தாா்.

இந்த நிலையில், சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா் (படம்).

ஆரணி நகர அதிமுக செயலா் அசோக்குமாா், முன்னாள் ஊராட்சித் தலைவா் வாசு, ஒப்பந்ததாரா் செல்வம் ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →