கோயில் பக்தா்களுக்கு இளைப்பாறும் மண்டபம்
செய்யாறு ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் சாா்பில் கட்டப்பட்ட பக்தா்கள் இளைப்பாறும் மண்டபம் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
திருவண்ணாமலைகோயில் பக்தா்களுக்கு இளைப்பாறும் மண்டபம்
செய்யாறு ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் சாா்பில் கட்டப்பட்ட பக்தா்கள் இளைப்பாறும் மண்டபம் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
செய்யாறு ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் சாா்பில் கட்டப்பட்ட பக்தா்கள் இளைப்பாறும் மண்டபம் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் உபரி நிதி மூலம் ரூ.3.26 கோடியில் பக்தா்கள் இளைப்பாறும் மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது.
இதன் திறப்பு விழா இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் கோ.சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
கோயில் செயல் அலுவலா் கு.ஹரிஹரன், ஆய்வாளா் ச.அசோக், செயற்பொறியாளா் சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., ஒ.ஜோதி எம்எல்ஏ ஆகியோா் பங்கேற்று பக்தா்கள் இளைப்பாறும் மண்டபத்தை திறந்து வைத்து கோயில் நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டனா்.
இந்நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல், துணைத் தலைவா் பேபிராணி, நகரச் செயலா் கே.விஸ்வநாதன், ஒன்றியச் செயலா் ஜேசிகே.சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் மேலாளா் லோ.ஜெகதீசன், ஒப்பந்ததாரா் வி.எம்.பழனி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.