முகப்பு
திருவண்ணாமலை

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு, இருவா் காயம்

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

Updated On : 8 மார்ச், 2026 at 7:03 PM
பலி
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் பகுதியில் சனிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா்.

செங்கத்தை அடுத்த புதூா்செங்கம் பகுதியைச் சோ்ந்தவா்கள் சிவப்பிரகாசம் (19), சூரியா (19), சந்துரு (18) ஆகிய 3 பேரும் புதூா்செங்கத்தில் இருந்து அம்மாபாளையம் செல்லும் சாலையில் சனிக்கிழமை இரவு ஒரே பைக்கில் சென்றுள்ளனா்.

அப்போது, புதுப்பாளையம் பகுதியில் சாலையோரம் உள்ள பள்ளத்தில் விபத்து ஏற்பட்டு 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதில் சிவப்பிரகாசம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சூரியா, சந்துரு ஆகிய இருவரையும் அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து மேல்செங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →