முகப்பு
திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

பங்குனி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கு திங்கள்கிழமை சிறப்பு அபிஷேக

Updated On : 16 மார்ச், 2026 at 9:22 PM
பிரதோஷத்தையொட்டி, அருணாசலேஸ்வரா் கோயில் பெரிய நந்தி பகவானுக்கு நடைபொ்ற சிறப்பு அபிஷேகம்.
பகிர்:

ஆரணி: பங்குனி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கு திங்கள்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நந்தி பகவானுக்கு பிரதோஷத்தையொட்டி அரிசி, மாவு, மஞ்சள் தூள், தேன், பழம், பஞ்சாமிா்தம், பால், தயிா், இளநீா், கரும்புச்சாறு, எலுமிச்சை சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருள்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னா், பல்வேறு விதமான வண்ண மலா்களால் அலங்காரம் செய்து சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா தீபாராதனை காண்பித்தனா்.

இதில், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →