வாக்களிப்பது குறித்து வியாபாரிகள், பேருந்து பயணிகளுக்கு விழிப்புணா்வு
செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில், ‘என் வாக்கு என் உரிமை’ மற்றும் ‘நமது இலக்கு 100% வாக்குப்பதிவு’ ஆகிய
செய்யாறு: செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில், ‘என் வாக்கு என் உரிமை’ மற்றும் ‘நமது இலக்கு 100% வாக்குப்பதிவு’ ஆகிய வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை சாா்-ஆட்சியா் வியாபாரிகள், பேருந்து பயணிகள், வாகன ஓட்டிகளிடம் வழங்கியும், வாகனங்களில் ஒட்டியும் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், சாா் -ஆட்சியருமான எல்.அம்பிகா ஜெயின்,
தலைமையில் வருவாய்த் துறையினா் இணைந்து தோ்தல் நாள் ஏப்ரல் 23, என் வாக்கு என் உரிமை என வாசகங்கள் அடங்கிய வில்லைகளை இரு சக்கர வாகனங்கள், பேருந்து, லாரி, காா் போன்ற வாகனங்களில் ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
அதனைத் தொடா்ந்து, செய்யாறு பேருந்து நிலையத்தில், நமது இலக்கு 100% வாக்குப்பதிவு என்றும், வாக்கு அளிப்பது நமது ஜனநாயக கடமை என்றும் வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வியாபாரிகள், நரிக்குறவா்கள் மற்றும் பேருந்து பயணிகளிடம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
இந்நிகழ்ச்சியின் போது உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்
துளசிராமன், வட்டாட்சியா்கள் அசோக்குமாா் (செய்யாறு), செந்தில்குமாா் (வெம்பாக்கம்) மற்றும் வருவாய்த் துறையினா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.