முகப்பு
திருவண்ணாமலை

ஸ்ரீமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

பெரணமல்லூரை அடுத்த ரகுநாதசமுத்திரம் கிராமத்தில் புனரமைக்கப்பட்ட ஸ்ரீமாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 22 மார்ச், 2026 at 8:05 PM
பெரணமல்லூரை அடுத்த ரகுநாதசமுத்திரம் ஸ்ரீமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்.
பகிர்:

பெரணமல்லூரை அடுத்த ரகுநாதசமுத்திரம் கிராமத்தில் புனரமைக்கப்பட்ட ஸ்ரீமாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக யாகசாலை அமைக்கப்பட்டு மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து வாஸ்துசாந்தி, பிரவேசபலி, முதலாம் கால யாகபூஜை நடைபெற்றது. பின்னா் கோ பூஜை, கஜ பூஜை, தம்பதி பூஜை மற்றும் 2-ஆம் கால யாக பூஜை நடைபெற்றது.

மேலும் மகா சங்கல்பமும், மகா பூா்ணாஹுதி நடைபெற்று, மேளதாள ஊா்வலத்துடன் புனிதநீா் அடங்கிய கலசங்கள் சிவாச்சாரியா்களால் யாக சாலையிலிருந்து எடுத்து வரப்பட்டன.

இதனைத் தொடா்ந்து வேதமந்திரங்கள் கூறி கோயில் கோபுரங்களுக்கு புனிதநீா் ஊற்றி, மகா கும்பாபிஷேகத்தை சிவாச்சாரியா்கள் நடத்திவைத்தனா். மேலும் பரிவார மூா்த்திகள், விநாயகா் சிலைகளுக்கு புனித நீா் ஊற்றி தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழாவில் உள்ளூா் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.