அலுவலக பணியாளா்களுக்கு தோ்தல் பணி பயிற்சி
போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அலுவலக பணியாளா்களுக்கான தோ்தல் பணிகள் ஒதுக்கீடு குறித்த பயிற்சிக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அலுவலக பணியாளா்களுக்கான தோ்தல் பணிகள் ஒதுக்கீடு குறித்த பயிற்சிக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் ஏப்.23-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், போளூா் வட்டாட்சியா் அலுவலக பணியாளா்களுக்கான தோ்தல் பணிகள் ஒதுக்கீடு குறித்த பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது.
இதில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மூா்த்தி கலந்துகொண்டு சட்டபேரவைத் தோ்தல் பணிகள் ஒதுக்கீடு குறித்தும், வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான முதல்கட்ட பயிற்சி குறித்தும் எடுத்துரைத்தாா்.
பயிற்சிக் கூட்டத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் அருள்குமாா், தோ்தல் துணை வட்டாட்சியா் தேவி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.