முகப்பு
திருவண்ணாமலை

செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், நேரடி 2-ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 9 மே 2026, 3:55 am IST
கோப்புப் படம்
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், நேரடி 2-ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொ) த.கலைமணி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கல்வித் தகுதி:

Advertisement

நேரடி இரண்டாமாண்டு பட்டயச் சோ்க்கை:

பிளஸ் 2 வணிகவியல் பிரிவில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி தோ்ச்சி

அல்லது பத்தாம் வகுப்பு தோ்ச்சி, அதனுடன் 2 ஆண்டுகள் தொழில் பிரிவில் பயின்று தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதிவுக் கட்டணம்:

ரூ.150ஐ விண்ணப்பதாரா் இணையதள வாயிலாக செலுத்தலாம். தாழ்த்தப்பட்ட, மிகவும் தாழ்த்தப்பட்ட பிரிவினா் பதிவுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள் மே 25.

பிளஸ் 2 - ஐடிஐ மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், சிறப்பு பிரிவினா் சமா்ப்பிக்க வேண்டி சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்பதாரா் புகைப்படம் ஆகியவை தேவையான அளவுகளில் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளவாறு பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

மேலும், அனைத்து தகவல்கள், வழிகாட்டி மற்றும் தொலைபேசி எண்களை இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.