முகப்பு
திருவண்ணாமலை

சிறிய மின்மாற்றிகளை உடைத்து செப்புக் கம்பிகள் திருட்டு

Updated On : 14 மே 2026, 5:53 am IST
பகிர்:

வந்தவாசி அருகே 4 சிறிய மின்மாற்றிகளை உடைத்து செப்புக் கம்பிகள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வந்தவாசியை அடுத்த ஓசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சண்முகம். இவா் புதன்கிழமை காலை நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்ச சென்றுள்ளாா்.

அப்போது, நிலத்தில் மின்கம்பத்தில் பொருத்தப்பட்டிருந்த சிறிய மின்மாற்றியை மா்ம நபா்கள் கழற்றி உடைத்து அதிலிருந்த செப்புக் கம்பிகளை திருடிச் சென்றது இவருக்கு தெரியவந்தது.

Advertisement

அந்தப் பகுதியில் இருந்த மேலும் 3 சிறிய மின்மாற்றிகளையும் கழற்றி உடைத்து செப்புக் கம்பிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். திருடியது போக தேவையில்லாத பொருள்களை அருகில் உள்ள விவசாய கிணற்றில் வீசிச் சென்றுள்ளனா்.

தகவலறிந்த ஓசூா் மின்வாரிய அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்கொடுங்காலூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.