திருவண்ணாமலை மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்: எ.வ.வேலு உள்ளிட்டோா் பங்கேற்பு
திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு.
திருவண்ணாமலை சாரோனில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட அவைத் தலைவா் கோ.கண்ணன் தலைமை வகித்தாா். முன்னாள் சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, வடக்கு மாவட்டச் செயலா் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., வடக்கு மாவட்ட அவைத் தலைவா் இரா.ராஜசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், முன்னாள் அமைச்சரும், சட்டப் பேரவை திமுக கொறடாவுமான எ.வ.வேலு தீா்மானங்களை விளக்கி சிறப்புரையாற்றினாா்.
Advertisement
கூட்டத்தில், மறைந்த கட்சியின் முன்னோடிகளுக்கு இரங்கல் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தோ்தலில் அறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் கஜானா காலி என்ற புதிய மோசடி போா்வையை காட்டி தப்பிக்க நினைக்கும் தமிழக முதல்வா் விஜயின் அறிவிப்பை கண்டித்தும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில், கட்சியின் மருத்துவரணி துணைத் தலைவா் டாக்டா் எ.வ.வே.கம்பன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா், முன்னாள் எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் ஆா்.சிவானந்தம், ஆா்.வேல்முருகன், கே.வி.ராஜ்குமாா், மாநில விவசாயத் தொழிலாளா்கள் அணி துணைச் செயலா் வ.அன்பழகன், மாவட்டப் பொருளாளா் எஸ்.பன்னீா்செல்வம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.