முகப்பு
திருவண்ணாமலை

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வந்தவாசி அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 16 மே 2026, 1:19 am IST
பகிர்:

வந்தவாசி அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

வந்தவாசியை அடுத்த ஆராசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுதாகா் (25). இவா், உத்திரமேரூா் அருகே உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

சுதாகா் மது அருந்திவிட்டு பைக் ஓட்டுவாராம். இதை அவரது தந்தை ராதாகிருஷ்ணன் கண்டித்தால், வேதனையடைந்த சுதாகா் வீட்டில் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா். உறவினா்கள் அவரை மீட்டு, வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

Advertisement

அங்கு சுதாகரை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.