பைக்கிலிருந்து மயங்கி விழுந்த பெண் உயிரிழப்பு
வந்தவாசி அருகே பைக்கிலிருந்து மயங்கி விழுந்த பெண் உயிரிழந்தாா்.
வந்தவாசி அருகே பைக்கிலிருந்து மயங்கி விழுந்த பெண் உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த கீழ்வெள்ளியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி. இவா், தனது மனைவி விஜயாவுடன் (58) கடந்த 17-ஆம் தேதி மொபெட்டில் வந்தவாசிக்கு புறப்பட்டாா்.
சிறிது தொலைவு சென்றவுடன் விஜயா மயக்கம் வருவதாகக் கூறினாராம். இதையடுத்து, பழனி மொபெட்டை நிறுத்தியபோது, விஜயா மயங்கி சாலையில் விழுந்துள்ளாா். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவா், வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
Advertisement
Advertisement
பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயா வியாழக்கிழமை இறந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.