முகப்பு
வேலூர்

தேர்ச்சி விகிதத்தை உயர்த்த தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை

மாவட்டத்தில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது குறித்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வேலூர் முஸ்லிம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:55 AM
பகிர்:

மாவட்டத்தில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது குறித்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வேலூர் முஸ்லிம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

 கூட்டத்துக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செங்குட்டுவன் தலைமை வகித்தார்.

பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (தொழில்கல்வி) முத்துபழனிசாமி கூட்டத்தில் பேசியது: 

மாநில அளவில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்க வேண்டும். தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் தலைமை ஆசிரியர்கள் பணியாற்றவேண்டும்.

 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் அனைவருக்கும் தமிழ், ஆங்கிலத்தில் கட்டாயம் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்றார் அவர். இதில் மாவட்டக் கல்வி அலுவலர் சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →