வேலூர்

கோயிலில் அம்மன் சிலை திருட்டு

DIN

பேர்ணாம்பட்டு அருகே கோயில் கருவறையில் இருந்த அம்மன் சிலை திருட்டு போனது.
பேர்ணாம்பட்டு பேருந்து நிலையம் எதிரே சுமார் 60 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருப்பதி கெங்கையம்மன் கோயில் உள்ளது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை, 2 அடி உயர கல்லாலான மூலவர் சிலையை மர்ம நபர்கள் பீடத்தில் இருந்து பெயர்த்து எடுத்துச் சென்றனர். இதுதொடர்பாக பேர்ணாம்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை மறியல்...
இதற்கிடையில் சிலையை திருடிச் சென்றவர்களை உடனடியாக கைது செய்து சிலையை மீட்கக் கோரி விஜய பாரத மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் ஜெய்சங்கர் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் கோயில் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த குடியாத்தம் போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT