வேலூர்

கல்லூரிப் பேராசிரியை தற்கொலை: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்

DIN

வேலூர் அருகே கல்லூரிப் பேராசிரியை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, பேராசிரியையின் உறவினர்கள் சத்துவாச்சாரி காவல் நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனர்.
வேலூரை அடுத்த பெருமுகையைச் சேர்ந்தவர் இன்பநாதன் (30). இவருக்கும் ஆற்காடு அருகே உள்ள புங்கனூரைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியையான சரண்யாவுக்கும் (25) கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், கணவர் வீட்டில் இருந்த சரண்யா ஞாயிற்றுக்கிழமை காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக, பெண்ணின் பெற்றோருக்கு இன்பநாதன் தகவல் தெரிவித்தார்.
மேலும், இதுகுறித்து அறிந்த சத்துவாச்சாரி போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று, சரண்யாவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, சரண்யாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினர்கள் சத்துவாச்சாரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அங்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.ஆரோக்கியம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து, சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, அனைவரும் கலைந்துச் சென்றனர். சரண்யாவுக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆவதால், இச்சம்பவம் குறித்து, வருவாய் கோட்டாட்சியர் அஜய் சீனிவாசனும் விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT