வேலூர்

மெக்கானிக்கை கடத்தி ரூ. 50 ஆயிரம் பறிப்பு: போலீஸார் விசாரணை

DIN

சோளிங்கர் அருகே மெக்கானிக்கை கடத்தி ரூ. 50 ஆயிரத்தை பறித்துச் சென்ற கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
சோளிங்கரை அடுத்த பாணாவரம் அருகே  உள்ள வேப்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன் (35). இவர் ராணிப்பேட்டையில் உள்ள லாரி  பழுதுபார்ப்பு கடையில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் 21-ஆம் தேதி ராணிப்பேட்டையில் இருந்து வேப்பேரிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றார்.
அப்போது இவரை பின்  தொடர்ந்து காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், கேசவனை வழி மறித்தது. பின்னர், கத்தியைக் காட்டி மிரட்டி காரில் ஏற்றிக் கொண்டு புதூர் ஏரிக்குச் சென்றது. அங்கு காரை நிறுத்தி விட்டு ரூ. 2 லட்சம் கொடுத்தால் தான் விடுவிப்போம், இல்லாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டி, கேசவனைத் தாக்கியதாகத் தெரிகிறது.
இதையடுத்து, கேசவன் ராணிப்பேட்டையில் உள்ள மெக்கானிக் கடை உரிமையாளர் அப்துல் கரீமை தொடர்பு கொண்டு, நடந்த விவரத்தை தெரிவித்துள்ளார். மேலும்  தன்னை காப்பாற்றுமாறு கேட்டுள்ளார்.  அதன்படி, அப்துல் கரீம் ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை எடுத்துச் சென்று கடத்தல் கும்பலிடம் கொடுத்துவிட்டு, கேசவனை மீட்டு நெமிலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.  
இச்சம்பவம் குறித்து கேசவன் பாணாவரம் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து, பணத்தை பறித்துச் சென்ற கும்பல் குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரம் விலக்கில் வேகத்தடைக்கு தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்

விபத்தில் பலியானவா் குடும்பத்துக்கு ரூ.30.51 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கைது, நோட்டீஸ்: மத்திய அரசு விவரம் சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வாக்குப்பதிவை அதிகரிக்க இரட்டிப்பு முயற்சி: தோ்தல் ஆணையம்

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உதவியதாக பஞ்சாபில் ஒருவா் கைது

SCROLL FOR NEXT