முகப்பு
வேலூர்

வீடு இடிந்து விழுந்து மூதாட்டி சாவு

திருப்பத்தூர் அருகே குடிசை வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி புதன்கிழமைஇறந்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:52 PM
பகிர்:

திருப்பத்தூர் அருகே குடிசை வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி புதன்கிழமை
இறந்தார்.
திருப்பத்தூரை அடுத்த சுந்தரம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டாள் (80). இவர், குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார். திருப்பத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3 நாள்களாக கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் புதன்கிழமை இரவு இடியுடன் கூடிய கன மழை பெய்தது. அப்போது குடிசை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஆண்டாள் மீது வீடு இடிந்து விழுந்தது. இதனால் ஆண்டாள் நிகழ்விடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்த கந்திலி போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →