வேலூர்

போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பிய அரசு ஊழியர், ஆசிரியர்கள்

DIN

வேலூரில் கடந்த 9 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு ஊழியர், ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை பணிக்குத் திரும்பினர்.
ஏழாவது ஊதியக் குழு அமைக்கும் வரையில் இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்டத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டமைப்பினர் (ஜாக்டோ-ஜியோ) செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்பினால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வகையில் உரிய வழிவகை செய்யப்படும் என நீதிமன்றம் அறிவுறுத்தியதை ஏற்றுக் கொண்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தாற்காலிகமாகப் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தனர்.
ஆட்சியர் அலுவலகம் அருகே வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியர், ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை பிற்பகலில் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT