வேலூர்

வருவாய் ஆய்வாளரை தரக்குறைவாக பேசியதாக 3 பேர் கைது

DIN

மாதனூரில் பெண் வருவாய் ஆய்வாளரை தரக்குறைவாகப் பேசியதாக 3 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது
செய்தனர்.
மாதனூர் அருகே திருமலை குப்பத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் புளிய மர ஏலம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த சிலர் நெடுஞ்சாலைத் துறை வருவாய் ஆய்வாளர் லீலாவதியிடம் தகராறு செய்ததாகத் தெரிகிறது. மேலும் புளிய மர ஏலத்தை தடுத்து தரக்குறைவாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆம்பூர் கிராமியக் காவல் நிலையத்தில் லீலாவதி அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து தரக்குறைவாகப் பேசியதாக, திருமலைகுப்பத்தைச் சேர்ந்த ரஜினிகாந்த் (33), சாரதி (22), முருகேசன் (45) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

SCROLL FOR NEXT