முகப்பு
வேலூர்

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,500 வழங்க வலியுறுத்தி, வேலூரில் ஓய்வூதியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,500 வழங்க வலியுறுத்தி, வேலூரில் ஓய்வூதியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,500 வழங்க வலியுறுத்தி, வேலூரில் ஓய்வூதியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுத் துறை ஓய்வூதியர் நலச் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார். செயலர் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், 2017-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஓய்வூதிய ஆணையை செயல்படுத்த வேண்டும், ஓய்வூதிய நலனுக்கான கோத்தாரி கமிட்டி பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும், அதிகபட்ச ஓய்வூதியத்தை அனைத்து ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும், இ.பி.எஃப். திட்டத்தில் செலுத்தும் சேமிப்பு பணத்துக்கு அளிக்கும் வட்டியை 8.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. 
இதில், சங்க நிர்வாகிகள் சீனிவாசன், கதிர்வேல், சுப்பிரமணி, கோபிநாதன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →