முகப்பு
வேலூர்

காப்புக் காட்டில்  வனவிலங்குகளை வேட்டையாடியவர் கைது

ஒடுக்கத்தூர் காப்புக் காட்டில் வன விலங்குகளை வேட்டையாடிய நபரை வனத் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

Updated On : 9 ஜூலை, 2018 at 5:31 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

ஒடுக்கத்தூர் காப்புக் காட்டில் வன விலங்குகளை வேட்டையாடிய நபரை வனத் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
ஒடுகத்தூர் வனச்சரகம் கருத்தமலை காப்புக் காடு பகுதியில் கள்ளச் சாராய விற்பனை, வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், ஒடுகத்தூர் வனச் சரக அலுவலர் பாலாஜி தலைமையில் வனத் துறைப் பணியாளர்கள் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வன விலங்குகளை வேட்டையாடிய இருவர் வனத் துறையினரைப் பார்த்து தப்பியோட முயன்றனர். அதில் ஒருவர் பிடிபட்டார்.  மற்றொருவர் 
தப்பியோடினார்.
விசாரணையில் அவர் பீஞ்சமந்தையை அடுத்த பலாமரத்துக் கொல்லை கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்தனர். தப்பியோடிய தலைமறைவான அதே பகுதியை சேர்ந்த சின்னசாமியை (25) தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.