முகப்பு
வேலூர்

அரசு உதவி பெறும் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்

திருவலம் அருகே அரசு நிதி உதவி பெறும் கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கணக்கு பாடங்கள்

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

திருவலம் அருகே அரசு நிதி உதவி பெறும் கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கணக்கு பாடங்கள் நடத்த ஆசிரியர்கள் இல்லாததால் பொதுத் தேர்வு எழுத முடியாத நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறி பெற்றோர்கள் வியாழக்கிழமை பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காட்பாடியை அடுத்த கசம் பகுதியில் திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தின் கீழ் அரசு நிதி உதவி பெறும் தேவலாய்சு என்ற கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. வேலூர் சிஎஸ்ஐ பேராயத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இப்பள்ளி உள்ளது. இங்கு  6 முதல் பிளஸ் 2  வரை சுமார் 160 மாணவர்கள் பயன்று வருகின்றனர். 21 ஆசிரியர்களும், 6 அலுவலகப் பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வியாழக்கிழமை தொடங்கின.
இந்நிலையில் வியாழக்கிழமை இப்பள்ளியை மாணவர்களின் பெற்றோர்கள் திடீரென முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது: இப்பள்ளியில் மாணவர்களுக்கு சரியாக கல்வி கற்பிப்பதில்லை. மாணவ, மாணவிகளுக்கு தேவையானக் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதுகுறித்து கேட்டால் பள்ளி நிர்வாகத்தினர் உரிய பதில் அளிப்பதில்லை. தற்போது பொதுத் தேர்வு தொடங்கியுள்ள நிலையில் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம், கணக்கு பாடங்கள் நடத்த ஆசிரியர்கள் இல்லாததால், பாடங்கள் முடிக்கப்படவில்லை. இதனால், இத்தேர்வுகளை எழுத முடியாத நிலையில் மாணவர்கள் உள்ளனர் என்றனர். 
மேலும், பள்ளித் தலைமை ஆசிரியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  
பள்ளி முதல்வர் இல்லாததால் அவரது பொறுப்பில் இருந்த தமிழ் ஆசிரியர் மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து சிஎஸ்ஐ  பேராயத்திடம் தெரிவித்து  நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →