வேலூர்

ரயில் விபத்து: இருவர் சாவு

DIN

ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்தும், ரயிலில் அடிபட்டும் இருவர்  இறந்தனர்.
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள 4-ஆவது நடைமேடையில் செவ்வாய்க்கிழமை சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சென்னை செல்லும் ரயிலில் ஏறுவதற்காக ஓடிய போது தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். 
இதையடுத்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் அவரை மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் இறந்தார். இறந்தவர் கருப்பு பேண்ட், வெள்ளை நிற சட்டை 
அணிந்திருந்தார்.
மற்றொரு விபத்து... திருப்பத்தூர் அருகே மொளகரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜி என்கிற புட்டன்(70). இவர், திருப்பத்தூர்-காக்கங்கரை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது அவ்வழியாகச் சென்ற ரயிலில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே இறந்தார். 
தகவலறிந்து அங்கு சென்ற ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் சடலத்தை மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த இரு விபத்துகள் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT