வேலூர்

தேசிய நூலக வார விழா

DIN

ஆம்பூர் அருகே வடசேரி ஊர்ப்புற நூலகத்தில் 51-ஆவது தேசிய நூலக வார விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
வாசகர் வட்டத் தலைவர் மு. பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். நூலக வார விழாவையொட்டி, நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வேலூர் மாவட்ட நூலக அலுவலர் க.ஆனந்தன் பரிசுகளை வழங்கினார். பேராசிரியர் க.தாமோதரன், ஆசிரியர் மு.மணிவேல், வழக்குரைஞர் சீனிவாசன், மின்வாரிய உதவிப் பொறியாளர் அன்பரசன்,  தலைமை ஆசிரியர் குமார், ஆசிரியர் ரவி, ஆசிரியைகள் 
ஆ.வசந்தி, குணவதி மற்றும் சரவணன், கண்ணன், கிருபாகரன், சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  
விழாவில் தலைமை ஆசிரியர் எஸ்.குமார், ஆசிரியர்கள் 
ஆர்.மாதவி, ஜி.சுமதி, ஏ.ரவி ஆகியோர் புரவலர்களாக சேர்ந்தனர்.மேலும், மாநில அளவில் ஊர்ப்புற நூலகத்தில் அதிக நன்கொடை பெற்றமைக்காக கல்வி அமைச்சரிடமிருந்து சென்னையில் நடைபெற்ற விழாவில் விருது பெற்ற வாசகர் வட்டத் தலைவர் மு. பாலசுப்பிரமணியம் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். ஊர்ப்புற நூலகர் (பொறுப்பு) ஜெ.விஜயகுமார் நன்றி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT