பூங்காவில் எம்எல்ஏ ஆய்வு
ஆற்காடு நகரில் உள்ள பூங்காவில் மக்கும் குப்பைக் கிடங்கு கட்டப்பட்டு, அதில் மக்கும் பொருள்கள் சேகரிக்கப்பட்டு, இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.
ஆற்காடு நகரில் உள்ள பூங்காவில் மக்கும் குப்பைக் கிடங்கு கட்டப்பட்டு, அதில் மக்கும் பொருள்கள் சேகரிக்கப்பட்டு, இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இதனை எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது பூங்காக்களுக்கு வரும் பொதுமக்களுக்கு இடையூறு இன்றி உரம் தயாரிக்கும் திட்டதை செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு எம்எல்ஏ உத்தரவிட்டார். தொடர்ந்து, ஆற்காடு நகர பேருந்து நிலையத்தில் சாலையின் நடுப்பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பள்ளமான பகுதியைப் பார்வையிட்டு, அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நகராட்சி ஆணையர் ஷகிலா, பொறியாளர் அனந்தஜோதி, அதிகாரிகள் உடனிருந்தனர்.