வேலூர்

விவசாயிகளுக்கு பண்ணைப் பள்ளி பயிற்சி

DIN

குடியாத்தத்தை அடுத்த கூடநகரம் கிராமத்தில், வேளாண்மைத் துறை சார்பில், அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மணிலா மற்றும் எள் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் நிர்வாகம் குறித்து பண்ணைப் பள்ளி பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
வேளாண்மை துணை இயக்குநர் அ. பாலா, மணிலாவில் உயர் விளைச்சல், விதைத் தேர்வு, விதை நேர்த்தி குறித்தும், விரிஞ்சிபுரம் வேளாண்மை ஆராய்ச்சி மைய உதவிப் பேராசிரியர் வீரமணி, நவீன தொழில்நுட்ப முறைகள், இயந்திர பயன்பாட்டு முறை குறித்தும், வேளாண்மை அலுவலர் ஆர். உமாசங்கர் தரமான விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்தும், வேளாண்மை உதவி இயக்குநர் 
ஆர்.விஸ்வநாதன், வயல்மட்ட அளவில் பூச்சி நோய் கண்காணிப்பு முறைகள் குறித்தும் விளக்க உரையாற்றினர்.
இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சு. வெங்கடேசன், சு. தமிழரசி, உதவி வேளாண்மை அலுவலர் கே. சிவப்பிரகாசம் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT