வேலூர்

பிச்சனூர் சுப்பிரமணியர் கோயிலில் பவித்திர உற்சவம்

DIN

குடியாத்தம் பிச்சனூர் தேரடியில்  உள்ள வள்ளி,  தெய்வானை  சமேத  சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை பவித்திர உற்சவம் நடைபெற்றது. 
இதையொட்டி, யாக சாலை பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. இதில், கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, முதல் கால யாக சாலை பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. திங்கள்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, தொடர்ந்து பட்டு பவித்ர சமர்ப்பணம், மகா பூர்ணாஹுதி, கலசாபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. மதியம் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் க.கோ.நெடுஞ்செழியன், எஸ்.ஜி.எம்.விநாயகம், எஸ்.டி.மைவண்ணன், அர்ச்சகர்கள் கே.பிரபாகர சிவாச்சாரியார், எம்.கார்த்திகேய சிவாச்சாரியார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT