வேலூர்

பல்கலைக்கழக தேர்வில் 5 மாணவிகள் தங்கப்பதக்கம்: மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி சாதனை

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் மதிப்பெண் தரவரிசைப் பட்டியலில் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 5 மாணவிகள் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளனர். 

DIN

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் மதிப்பெண் தரவரிசைப் பட்டியலில் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 5 மாணவிகள் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளனர். 
2018-19 கல்வியாண்டில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்  நடைபெற்ற பருவத்தேர்வின் மதிப்பெண் தரவரிசைப்பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. 
இப்பல்கலைக்கழகத்தின் கீழ் 95 சுயநிதிக் கல்லூரிகள் உள்பட 124 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. தேர்வெழுதிய கல்லூரிகளின் மதிப்பெண் தரவரிசை பட்டியலில் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளில்  இளங்கலைப் பிரிவில் 21 மாணவிகள், முதுகலைப் பிரிவில் 23 மாணவிகள் என மொத்தம் 44 மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனர். 
டி.அனுஷாமுஸ்கின் (பிஎஸ்சி ஐடி), ஏ.சலியாதபசும் (எம்ஏ ஆங்கிலம்), பி.திவ்யா(எம்சிஏ), கே.ரோஷின்குல்சும் (எம்.எஸ்சி), ஐ.சபியாரோகின்(எம்.காம்-சிஏ)) ஆகிய 5 மாணவிகளும் தங்களது பாடப்பிரிவுகளில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளனர். சாதனை படைத்த மாணவிகளை கல்லூரி நிர்வாகம், பேராசிரியர்கள், மாணவிகள் வாழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT