முகப்பு
வேலூர்

வாணியம்பாடியில் பிடிபட்ட அரிய வகை ஆஸ்திரேலிய ஆந்தை

வாணியம்பாடி அருகே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அரிய  வகை ஆந்தை பிடிபட்டது.

Updated On : 13 பிப்ரவரி 2019, 7:06 am IST
பகிர்:

வாணியம்பாடி அருகே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அரிய  வகை ஆந்தை பிடிபட்டது.
வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் கல்லறைத் தெருவில்  தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வித்தியாசமான வெள்ளை ஆந்தை ஒன்று தென்னை மரத்தில் அமர்ந்திருந்தது. அதைக் கண்ட பத்துக்கும் மேற்பட்ட காக்கைகள் அந்த ஆந்தையை   சுற்றி வந்து கொத்தின. 
இதனால் காயமடைந்த ஆந்தை பறந்து சென்று அருகே இருந்த அருள் என்பவரின் வீட்டின் மேல் அமர்ந்தது. இதையடுத்து காக்கைகளை விரட்டிய அப்பகுதி இளைஞர்கள், அந்த ஆந்தையை மீட்டு வாணியம்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல்  தெரிவித்தனர். அவர்களிடம் ஆந்தையை ஒப்படை த்தனர். பிடிப்பட்ட ஆந்தை  ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அரிய வகை ஆந்தை என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஆலங்காயம் வனத்துறையினரிடம் ஆந்தை  ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.