வேலூர்

கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

DIN

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத் துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் செவ்வாய், புதன் ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது.
கருத்தரங்குக்கு, கல்லூரியின் முதல்வர் மரிய அந்தோணி ராஜ் தலைமை வகித்தார். இல்லத் தந்தை அந்தோணிராஜ் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்த் துறைத் தலைவர் பொன் செல்வகுமார் வரவேற்றார்.
திருவள்ளுவர் பல்கலைக் கழகப் பதிவாளர் பெருவழுதி கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார். 
இந்திய வரலாற்று ஆய்வுத் துறை கல்வெட்டுகள் மற்றும் இலக்கியங்களில் பழந்தமிழர் கணக்கியல் எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. 
இதில், 40-க்கும் மேற்பட்ட கட்டுரையாளர்கள் ஆய்வுக் கருத்துகளை வழங்கினர். கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளர் மோகன் காந்தி நன்றி  கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

SCROLL FOR NEXT