வேலூர்

பொங்கல் பரிசு வழங்க பணியாளர் வராததால் பொதுமக்கள் மறியல்

DIN


பொன்னை பகுதிக்கு அருகே பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க பணியாளர் வராததால் பொதுமக்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 7-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 
இந்நிலையில், பொன்னையை அடுத்த மாதாண்டகுப்பம் பகுதியில் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு மற்றும் ரூ. 1000 பெற வெள்ளிக்கிழமை காலை முதல் பொதுமக்கள்காத்திருந்திருந்தனர். நீண்ட நேரமாகியும் ரேஷன் கடை பணியாளர் வராததால் ஆவேசமடைந்த அவர்கள் பொன்னை நெடுஞ்சாலையில் திடீரென்று மறியலில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT