வேலூர்

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை மாற்றியதாக புகார்: போலீஸார் தீவிர விசாரணை

DIN

வேலூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது குழந்தை மாற்றப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் குசேலன். இவரது மனைவி பாரதி. இவர்களுக்கு ஏற்கெனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது. நிறைமாத கர்ப்பிணியான பாரதி கடந்த 10-ஆம் தேதி பிரசவதத்துக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 
12-ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததாகக் கூறி, செவிலியர் ஒருவர் குழந்தையைக் கொண்டு வந்து உறவினர்களிடம் காட்டியுள்ளனர். ஆனால் அன்று இரவு, அவருக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை என்றும், பெண் குழந்தை தான் பிறந்ததாக மற்றொரு செவிலியர் கூறியுள்ளார். இதைக் கேட்டு குசேலன்-பாரதி தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.  மேலும், பெண் குழந்தை எடை குறைவாகவும், மூச்சுத் திணறலுடன் பிறந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த குசேலன் அங்கிருந்த மருத்துவர்களிடம் வாக்குவாதம் செய்தார்.  அதைத் தொடர்ந்து அந்த வார்டில் பொறுப்பில் இருந்த மருத்துவர், பெண் குழந்தையின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி சமாதானம் செய்தனர்.
இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பெண் குழந்தை செவ்வாய்க்கிழமை இறந்தது.  ஆத்திரமடைந்த குசேலன் மருத்துவமனைப் பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகவலறிந்த வேலூர் கிராமிய போலீஸார் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து வேலூர் டி.எஸ்.பி. (பொறுப்பு) லோகநாதன் குசேலன் தம்பதியினர் மற்றும் மருத்துவமனைப் பணியாளர்களிடம் புதன்கிழமை விசாரணை 
நடத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

SCROLL FOR NEXT