வேலூர்

குழந்தையைக் கொன்று பாலாற்றில் புதைத்த தாய், கணவர் கைது

DIN

வாலாஜாபேட்டையில் குழந்தையைக் கொலை செய்து பாலாற்றில் புதைத்த தாய், அவரது 2-ஆவது கணவரை போலீஸார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் ராமசந்திரன். இவரது மனைவி காவியா (35). இவர்களுக்கு 6 வயதில் தருண் என்ற குழந்தை இருந்தது. கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக காவியா வாலாஜாபேட்டையில் உள்ள தாய் வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் காவியா ராணிப்பேட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த தியாகு என்கிற தியாகராஜனை கடந்த ஜனவரி மாதம் 2-ஆவதாக திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து இருவரும் குழந்தை தருணுடன் வாலாஜாபேட்டையில் உள்ள பெல்லியப்பா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். தியாகராஜன் குழந்தை தருணை கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி தியாகராஜன், காவியா ஆகிய இருவரும் சேர்ந்து தருணை தண்ணீர் நிறைந்த பிளாஸ்டிக் டிரம்மில் அழுத்தி கொலை செய்து, ஆற்காடு அருகே உள்ள பாலாற்றில் புதைத்தனராம்.
இதுகுறித்து தகவலறிந்த தென்கடப்பந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் அதியமான் ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புதார் அளித்தார். அதன்பேரில் காவியாவை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். விசாரணையில் இருவரும் குழந்தையைக் கொலை செய்து புதைத்ததை காவியா ஒப்புக்கொண்டார். 
இதையடுத்து ஆற்காடு வட்டாட்சியர் வத்சலா முன்னிலையில் ராணிப்பேட்டை டிஎஸ்பி கலைச்செல்வன் தடயவியல் நிபுணர் ஆரி ஆகியோர் தலைமையில் ஆற்காடு பாலாற்றில் புதைக்கப்பட்ட குழந்தையின் சடலம் செவ்வாய்க்கிழமை தோண்டி எடுக்கப்பட்டது. மேலும், தலைமறைவான தியாகராஜனை போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுக ஆலோசனைக் கூட்டம்

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கட்டுமான பணியின்போது தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழப்பு

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உயிருக்கு அச்சுறுத்தல்: தோ்தல் ஆணையருக்கு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கடிதம்

SCROLL FOR NEXT