வேலூர்

முழுநேரமும் இஎஸ்ஐ மருத்துவமனை  இயங்கக்  கோரிக்கை

DIN

ஆம்பூர் இஎஸ்ஐ மருத்துவமனையை முழுநேர மருத்துவமனையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடாற்காடு மாவட்ட தோல் பதனிடும் தொழிலாளர் சங்கத்தின் மே தினக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆம்பூரில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் நேய.சுந்தர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் வி.விஸ்வநாதன், நிர்வாகிகள் பி.சம்பங்கி, எம்.முனிசாமி, சடையாண்டி, எஸ்.விமல், எஸ்.பி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆம்பூர் இஎஸ்ஐ மருத்துவமனையை 30 படுக்கைகள் கொண்ட முழு நேர மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டதை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தோல் பதனிடும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த அடிப்படை குறைந்தபட்ச ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ. 161 ஜூலை 2018 முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT