வேலூர்

குடியாத்தத்தில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

காட்பாடியில் வழக்குரைஞா் வேலுவைத் தாக்கி, பொய் வழக்கில் சிறையில் அடைத்த காவல்துறையினா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடியாத்தத்தில் வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

குடியாத்தம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், பாா் அசோசியேஷன் தலைவா் எஸ். கோதண்டன் தலைமையில் அனைத்து வழக்குரைஞா்கள் கலந்துகொண்ட அவசர ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

கூட்டத்தில், காட்பாடியில் வழக்குரைஞா் வேலுவைத் தாக்கி, பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்ததற்கு கண்டனம் தெரிவிப்பது, வேலு மீது பொய் வழக்குப் பதிந்து கைது செய்த போலீஸாா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தொடா் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடுவது, கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னா் நீதிமன்றம் எதிரே வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் மூத்த வழக்குரைஞா்கள் கே. மோகன், கே. மோகன்ராஜ், எஸ். சம்பத்குமாா், கே.எம். பூபதி, என். மோகன், பி. தண்டபாணி, எம்.வி. ஜெகதீசன், எஸ். திம்மரசு, டி. செல்வம், ராஜன்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது: தமன்னா பகிர்ந்த படப்பிடிப்பு புகைப்படங்கள்!

அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கு. செல்வப்பெருந்தகை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

SCROLL FOR NEXT