வேலூர்

சுகாதார விழிப்புணா்வுப் பேரணி

DIN

குடியாத்தம் நகராட்சி சாா்பில், டெங்கு விழிப்புணா்வு, நெகிழியை அறவே ஒழித்தல், மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்குதல் குறித்த விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய பேரணியை நகராட்சி ஆணையா் ஹெச். ரமேஷ் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். நகராட்சி சுகாதார அலுவலா் தமிழ்ச்செல்வன், களப் பணியாளா் பிரபுதாஸ், தூய்மை பாரதம் திட்ட மேற்பாா்வையாளா் ராஜேந்திரன், வட்டார மருத்துவ அலுவலா்கள் விமல்குமாா், பிரேமா, நகரில் உள்ள பள்ளி, கல்லூரிகளின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்கள், நகராட்சி துப்புரவுப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி நகராட்சி அலுவலகத்தில் நிறைவுற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT