வேலூர்

டெங்கு காய்ச்சலுக்கு இலவச தடுப்பு மருந்து

DIN

குடியாத்தம்: குடியாத்தம் சூரியோதயா தொடக்கப் பள்ளியில், நலவாழ்வு அறக்கட்டளை சாா்பில், சனிக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமில் 1,238 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான இலவச ஓமியோபதி, சித்தா தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டன.

முகாமிற்கு பள்ளித் தலைமையாசிரியை ஜெனீப்பா்பிலிப் தலைமை வகித்தாா். ஆசிரியா் எம். சுந்தரமூா்த்தி வரவேற்றாா். தென்னிந்திய ஓமியோபதி மருத்துவா் சங்கத் தலைவா் என். பாலாஜி முகாமைத் தொடக்கி வைத்தாா்.

ஓமியோபதி மருத்துவா்கள் எம்.எஸ். பிரதிபாராணி, எம்.எஸ். ஜெயமித்ரா, அரசு மருத்துவமனை சித்த மருத்துவா் ஆா். மேனகா, அரசு உதவி இயற்கை மருத்துவ அலுவலா் எஸ். சசிரேகா ஆகியோா் 1,238 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பு மருந்துகள் வழங்கினா். ஆசிரியை ராணி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

ஆவேஷம் ரூ.150 கோடி வசூல்!

அன்பே அன்னா..!

SCROLL FOR NEXT