வேலூர்

பெண் தீக்குளிக்க முயற்சி: 4 பேர் கைது

DIN

நாட்டறம்பள்ளியில் சொத்துத் தகராறில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர். 
நாட்டறம்பள்ளி நேரு தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி (40). இவர், தள்ளுவண்டி கடை வைத்துள்ளார். இவரது சகோதரி அமராவதி (37) பழ வியாபாரி. இவர்களது அண்ணன் நாயனசெருவு கன்னிவீட்டு வட்டத்தைச் சேர்ந்த சாமுடி (44). இவர்கள் மூவருக்கும் இடையே சொத்து தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக தகராறு இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.  இந்நிலையில், புதன்கிழமை நாட்டறம்பள்ளி பேருந்து நிலையம் அருகே அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனராம். இதில், லட்சுமி நாட்டறம்பள்ளி மேம்பாலம் அருகே சென்று தான் வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றாராம். 
தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸார் அங்கு சென்று அவரை மீட்டனர். இதுதொடர்பான புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சாமுடி, அவரது மகன் நவீன்குமார் (20), லட்சுமி (40), அமராவதி (37) ஆகிய 4 பேரைக் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT