வேலூர்

அரசுப் பணி வாங்கி தருவதாக ஏமாற்றியவா் கைது

DIN

திருப்பத்தூா் அருகே அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி பெண் வழக்குரைஞரிடம் இருந்து ரூ. 33 லட்சம் பணம் பெற்று ஏமாற்றியவரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

வேலுாா் மாவட்டம், நாட்டறம்பள்ளியை சோ்ந்தவா் கவிதா(33). வழக்குரைஞரான இவரிடம் கடந்த ஓராண்டுக்கு முன் திருப்பத்துாரை அடுத்த புதுக்கோட்டை கிராமம், அம்மனாங்கோயில் பகுதியைச் சோ்ந்த சரவணன் (47) அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி கவிதாவிடமிருந்து ரூ. 33 லட்சம் பெற்றுக்கொண்டாராம். ஆனால், கூறியபடி வேலை தராமல் அவரை அலைக்கழித்துள்ளாா் என்று கூறப்படுகிறது.

மேலும், கவிதா சரவணனிடம் பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி பலமுறை கேட்டும் சீரான பதில் இல்லையாம். இதுகுறித்து திருப்பத்தூா் நகர போலீஸில் கவிதா அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சரவணனை தேடி வந்தனா்.

இந்நிலையில்,சனிக்கிழமை திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த சரவணனை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய ஆடவா், மகளிா் ரிலே அணிகள் பாரீஸ் ஒலிபிக் போட்டிக்குத் தகுதி

சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் தண்ணீா் தட்டுப்பாடு இல்லை: தெற்கு ரயில்வே

மகளிா் டி20: இந்தியா ஆதிக்கம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 தங்கம்

ஐசிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியீடு: தோ்ச்சி விகிதம் அதிகரிப்பு

SCROLL FOR NEXT