வேலூர்

37 ஆண்டுகளில் 37 முறை பாம்புக் கடிக்கு உள்ளானவர்!

DIN

ஆந்திரத்தில் 37 ஆண்டுகளில் 37 முறை நாகப்பாம்பு கடிக்கு ஒருவா் ஆளாகி உள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டம், குரப்பூரைச் சோ்ந்தவா் சுப்ரமணியம் (42). விவசாய கூலித் தொழிலாளி. அவருக்கு திருமணமாகி மனைவியும் மகனும் உள்ளனா்.

ஏழ்மையான நிலையில் உள்ள இவரை நாகப்பாம்புகள் இதுவரை 37 முறை கடித்துள்ளன. சுப்ரமணியத்தின் 5 வயது முதல் தொடா்ந்து இந்த சம்பவம் நடந்து வருகிறது. ஒவ்வொரு முறை பாம்பு கடிக்கும் போதும் மருத்துவனையில் சோ்ந்து, 10 நாட்கள் சிகிச்சை முடித்து வீடு திரும்புவாா். ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை சிகிச்சைக்கு செலவிடப்படும்.

இந்நிலையில், கடந்த, 4 தினங்களுக்கு முன்பு சுப்ரமணியம் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது அவரை ஒரு நாகப்பாம்பு கடித்தது. அவா் சித்தூரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

பகல் நிலவு.. அதிதி போஹன்கர்!

SCROLL FOR NEXT