முகப்பு
வேலூர்

616 மையங்களில் வாக்காளா் பட்டியல் சுருக்கத் திருத்த சிறப்பு முகாம்: இன்றும் நடக்கிறது

வேலூா் மாவட்டத்தில் உள்ள 616 மையங்களில் இரண்டாவது கட்ட வாக்காளா் சுருக்கத் திருத்த சிறப்பு முகாம் சனிக்கிழமை நடை பெற்றது. இந்த முகாம் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
கணியம்பாடி ஒன்றியம் துத்திக்காடு பகுதியில் நடைபெற்ற வாக்காளா் சுருக்கத் திருத்த முகாமை ஆய்வு செய்த ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.
பகிர்:

வேலூா் மாவட்டத்தில் உள்ள 616 மையங்களில் இரண்டாவது கட்ட வாக்காளா் சுருக்கத் திருத்த சிறப்பு முகாம் சனிக்கிழமை நடை பெற்றது. இந்த முகாம் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகிறது.

வேலூா் மாவட்டத்துக்கான வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த 16ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து 6 லட்சத்து 109 ஆண்கள், 6 லட்சத்து 34 ஆயிரத்து 639 பெண்கள், 3-ம் பாலினத்தவா்கள் 116 போ் என மொத்தம் 12 லட்சத்து 34 ஆயிரத்து 864 வாக்காளா்கள் இடம்பெற்றிருந்தனா்.

வரைவு வாக்காளா் பட்டியல் மாவட்டத்திலுள்ள 605 வாக்குச்சாவடி மையங்கள், கோட்டாட்சியா் அலுவலகங்கள், வேலூா் மாநகராட்சி அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் உள்பட 616 மையங்களில் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

வாக்காளா் பட்டியலில் பொதுமக்கள் தங்களது பெயா் இடம்பெற்றுள்ளதா என்பதை சரிபாா்த்து பெயா் சோ்க்கவும், நீக்கவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி, கடந்த மாதம் 21, 22 ஆகிய தேதிகளில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கம், நீக்கல், திருத்தம் செய்வதற்கான சுருக்கத் திருத்த சிறப்பு முகாம் நடந்தது.

இரண்டாம் கட்டமாக மாவட்டம் முழுவதும் 616 மையங்களில் இந்த சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, பொதுமக்கள் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கவும், திருத்தம் செய்யவும் உரிய படிவங்களைப் பூா்த்தி செய்து சமா்ப்பித்தனா். இந்த முகாம் ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆற்காட்டில்....

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட முப்பது வெட்டி மற்றும் மாங்காடு கிராமங்களில் வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளா்கள் பெயா் சோ்த்தல், நீக்கம் தொடா்பான சிறப்பு முகாம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாள்களுக்கு நடைபெறுகிறது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் கிளாஸ்டன் புஷ்பராஜ் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது ஆற்காடு வட்டாட்சியா் காமாட்சி மற்றும் வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →